மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90 சதவீதம் முடிந்துவிட்டது - ஆறுமுகசாமி ஆணையம்
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை 90சதவீதம் முடிந்துவிட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜெயலலிதா மரணம் தொடர்பான இறுதி விசாரணை அறிக்கையை விரைவில் தாக்கல் செய்யக் கோரி மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆணையத்தின் சார்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர், 90 சதவீத விசாரணை ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறினார்.
இது தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கில் ஆணைய விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதால், 2019ம் ஆண்டு ஏப்ரல் முதல் விசாரணை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் ஆகஸ்ட் 25-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Comments