வரலாற்றில் முதன்முறையாக 55,000 புள்ளிகளைத் தாண்டியது மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் 55 ஆயிரம் என்னும் வரம்பைத் தாண்டியுள்ளது.
மும்பை பங்குச்சந்தையில் இன்று தொடக்கத்தில் இருந்தே வணிகம் ஏற்றம் கண்டது. பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 55 ஆயிரத்து 169 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தைப் பங்குவிலைக் குறியீடு நிப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 459 ஆக இருந்தது.
உலோகம், பெட்ரோலியம், வாகன உற்பத்தித் தொழில் நிறுவனங்களின் பங்கு மதிப்பு இரண்டரை விழுக்காடு வரை உயர்ந்தது.
Comments