தமிழக பட்ஜெட் தாக்கலின் முக்கிய அம்சங்கள்..!
எதிர்கட்சிகளின் அமளிக்கு இடையே பட்ஜெட் தாக்கல்
இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடக்கம்
முதலமைச்சரின் ஆலோசனை, வழிகாட்டுதலின் அடிப்படையில் பட்ஜெட் உருவாக்கம்
முதலமைச்சர் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளோம்
தமிழக நிதி நிலையை சீரமைக்கும் வகையில் பட்ஜெட் உருவாக்கப்பட்டுள்ளது
கடந்த 10 வருட அதிமுக அரசின் நிதி நிர்வாக சீர்கேட்டை சரிசெய்ய நடவடிக்கை
அடுத்த ஆண்டு திமுக அரசின் முழுமையான பட்ஜெட்டிற்கு தற்போதைய பட்ஜெட் அடித்தளமாக இருக்கும்
முதலமைச்சர் அளித்த வாக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றுவோம்
பதவி ஏற்ற முதல் நாளிலேயே ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றி முத்திரை பதித்தார் முதலமைச்சர்
தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியின் படி கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்பட்டது
வாக்குறுதி அளிக்கவில்லை என்றாலும், கொரோனா நிவாரணமாக உணவுப் பொருள் தொகுப்பு வழங்கப்பட்டது
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் பெறப்பட்ட 2.29 லட்சம் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது
தமிழக அரசின் நிதி நிலையை ஒரே ஆண்டில் சரி செய்ய முடியாத அளவிற்கு கடினமாக உள்ளது
மத்திய அரசால் குறிப்பிட்ட காலத்திற்கு விதிக்கப்படும் கூடுதல் வரிகள் காலவரையின்றி தொடர்கின்றன
மத்திய அரசால் குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்பட்ட கூடுதல் வரிகள், குறிப்பிட்ட நோக்கத்திற்கு பயன்படுத்தப்படவில்லை
பயனாளிகளின் தரவுகள் சரியாக இல்லை என்பதால் சமூக பொருளாதார திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியவில்லை
மாநிலத்தில் உள்ள அனைத்து பொது சேவைகளிலும் மின்னணு அளவீட்டு முறை அறிமுகப்படுத்தப்படும்
மானியங்கள் சரியான பயனாளிகளை சென்றடைவதை உறுதிப்படுத்த மின்னணு அளவீட்டு முறை
தமிழக அரசின் அனைத்து துறை தரவுகளும் கணினி முறையில் ஒருங்கிணைக்கப்படும்
அரசுக்கு சொந்தமான நிலங்களின் விவரங்களை சேகரித்து ஒருங்கிணைக்க புதிய அமைப்பு
2.05 லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான தமிழக அரசின் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது
பொது நில மேலாண்மைக்கு என்று தனியாக புதிய அமைப்பு உருவாக்கப்படும்
தமிழக அரசின் அனைத்து தணிக்கை துறைகளும் நிதித்துறையின் கீழ் கொண்டுவரப்படும்
1921ம் ஆண்டு முதலான சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் கணினிமயமாக்கப்படும்
தலைமைச் செயலகம் வரை அனைத்து துறை அலுவலகங்களும் தமிழை ஆட்சி மொழியாக பயன்படுத்துவது வலுப்படுத்தப்படும்
உலக அளவில் போற்றப்படும் தமிழ் படைப்புகள் வெவ்வேறு மொழிகளில், மொழிபெயர்க்கப்படும்
கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும்
கொற்கை, அழகன்குளம் பகுதிகளில் ஆழ்கடல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்
தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.80 கோடி, தொல்லியல் துறைக்கு ரூ.29.43 கோடி ஒதுக்கீடு
சமூகப்பாதுகாப்பு ஓய்வூதியங்களுக்கு ரூ.4807.56 கோடி உயர்த்தி ஒதுக்கீடு
நிலம் கையகப்படுத்துதலை எளிமையாக்க நடவடிக்கை, இழப்பீடு உரிய நேரத்தில் கிடைப்பது உறுதி செய்யப்படும்
எளிதில் வெள்ளப்பாதிப்புகள் ஏற்படும் 4133 இடங்கள் கண்டறியப்பட்டு சரி செய்யும் பணிகள் விரைவுப்படுத்தப்படும்
பேரிடர் மேலாண்மைக்காக 15வது நிதிக்குழு பரிந்துரைத்த ரூ.1360 கோடி போதுமானதாக இல்லை
காவல்துறையில் காலியாக உள்ள 14,317 இடங்களை நிரப்ப நடவடிக்கை
காவல்துறைக்கு ரூ.8930.29 கோடி ஒதுக்கீடு
தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு ரூ.405.13 கோடி ஒதுக்கீடு
தீ விபத்து இடத்திற்கு விரைவில் செல்ல தீயணைப்பு நிலையங்கள் அறிவியல் பூர்வ ஆய்வின் படி அமைக்கப்படும்
விபத்துகளை குறைக்க ஒருங்கிணைந்த சாலை பாதுகாப்பு இயக்கம் மாற்றி அமைக்கப்படும்
சாலை பாதுகாப்பு இயக்ககம் திட்டத்தை செயல்படுத்த ரூ.500 கோடி ஒதுக்கீடு
அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து நீதிமன்றங்களுக்கும் போதிய கட்டிடங்கள் இருப்பது உறுதி செய்யப்படும்
நீதித்துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்ப தமிழக அரசு ஆதரவு அளிக்கும்
நீதித்துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் ரூ.1713.30கோடி ஒதுக்கீடு
ரூ.1713.30 கோடியில் நீதிமன்றங்களுக்கு கட்டிடம் கட்ட ரூ.351.87 கோடி பயன்படுத்தப்படும்
ரூ.9370.11 கோடி செலவில் கோவிட் நிவாரணத் தொகுப்பு தமிழக மக்களுக்கு வழங்கப்பட்டது
நடப்பு பட்ஜெட்டில் உணவு மானியத்திற்கு ரூ.8437.57 கோடி ஒதுக்கீடு
அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 1000 தடுப்பணைகள் மற்றும் கதவணைகள் கட்டப்படும்
ஆனைமலையாறு, நீராறு - நல்லாறு, பாண்டியாறு-புனம்புழா திட்டத்திற்காக கேரள அரசுடன் பேச்சுவார்த்தை
நீர்நிலைகளை புனரமைக்க பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடி ஒதுக்கீடு
ரூ.30 கோடி செலவில் தமிழ்நாடு நீர்வள தகவல் மற்றும் மேலாண்மை அமைப்பு செயல்படுத்தப்படும்
பிரதமரின் வேளாண் நீர்பாசன திட்டத்தின் கீழ் ரூ.111.24 கோடியை பயன்படுத்தி 200 குளங்கள் தரம் உயர்த்தப்படும்
அணை சீரமைத்தல் மற்றும் புதுப்பித்தல் திட்டம் ரூ.610.26 கோடி செலவில் துவங்கப்படும் - உலக வங்கி உதவி பெறப்படும்
பாசனத்திற்கு ரூ.6607.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு
பருவ நிலை மாற்றத்திற்கான தழுவல் திட்டத்தின் இரண்டாம் கட்டம் ரூ.1825 கோடியில் காவிரி டெல்டாவில் செயல்படுத்தப்படும்
நீர்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கம் திட்டத்தின் 3ம், 4ம் கட்டம் ரூ.779 கோடியில் செயல்படுத்தப்படும்
ரூ.6000 கோடி மதிப்பில் இந்திய அளவில் கடல் மீன் உற்பத்தியில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது
மீனவருக்கான சேமிப்புடன் கூடிய நிவாரண திட்டத்திற்கு ரூ.303 கோடி ஒதுக்கீடு
ரூ.6.25 கோடி செலவில் 6 இடங்களில் மீன்பிடித்துறைமுகங்கள் அமைப்பது தொடர்பான ஆய்வு
காசிமேடு மீன்பிடித்துறைமுகம் ரூ.150 கோடியில் மேம்படுத்தப்படும்
மீன்பிடிதுறைமுகங்கள், மீன் இறங்குதளங்களை அமைக்க ரூ.433.97கோடி
மீன்பிடி இறங்குதளங்களை மேம்படுத்த ரூ.143 கோடி ஒதுக்கீடு
ரூ.500 கோடி செலவில் பருவநிலை மாற்ற இயக்கம் ஒன்று அமைக்கப்படும்
இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும்
ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த இயக்கம் ஒன்று உருவாக்கப்படும்
ரூ.100 கோடி செலவில் ஈர நிலங்கள் இயக்கத்தை செயல்படுத்த நடவடிக்கை
குறைந்தபட்சம் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரங்களில் காற்றின் தரம் அறியும் வசதி ஏற்படுத்தப்படும்
திட்டமதிப்பீடு, ஒப்பந்தபுள்ளி உள்ளிட்ட பணிகள் ஓராண்டுக்குள் முற்றிலும் மின்னணுமயமாக்கப்படும்
79,395 குக்கிராமங்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு நபருக்கு 55 லிட்டர் தரமான குடிநீர் வழங்க நடவடிக்கை
கிராமங்களில் அமைந்துள்ள 1.27கோடி குடும்பங்களுக்கு வீட்டுக்குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை
83.92 லட்சம் குடும்பங்களுக்கு 2024 மார்ச்சுக்குள் குடிநீர் இணைப்பு வசதிகள் வழங்க நடவடிக்கை
2021-22 ஆண்டில் ரூ.8017 கோடி செலவில் 2.89 லட்சம் வீடுகள் கட்டப்படும்
8.03 லட்சம் கிராமப்புற குடும்பங்களுக்கு அடுத்த 5 வருடங்களில் வீடுகள் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்படும்
கிராமப்புற வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3548 கோடி வழங்கப்பட்டுள்ளது
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3கோடி மீண்டும் வழங்கப்படும்
ரூ.1200 கோடியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்படும்
ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் கலைஞரின் நமக்கு நாமே திட்டம் மீண்டும் துவங்கப்படும்
ஊரக வாழ்வாதாரத்திட்டம் புதுப்பிக்கப்பட்டு 36218 மகளிர் குழுக்கள் பயன்பெறும் வகையில் ரூ.809.79 கோடி ஒதுக்கீடு
அனைத்து மாநகராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 135 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
அனைத்து நகராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 90 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
அனைத்து பேரூராட்சிகளிலும் ஒரு நபருக்கு தினசரி 70 லிட்டர் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்
1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 27 நகரங்களில் பாதாள சாக்கடை திட்டம்
நகராட்சி, பேரூராட்சிகளில் உள்ள மண் சாலைகள் மேம்படுத்தப்படும்
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன் உறுதி செய்யப்படும்
ரூ.1000 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும்
சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.2350 கோடி ஒதுக்கீடு
அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு
கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி
பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்
சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2371 கோடி
சென்னையுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி
சுவரொட்டி இல்லாத நகர் சென்னை ரூ.1000 கோடியில் நகர்பற மேம்பாட்டு திட்டம்
சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.20ஆயிரம் கோடி கடன்
ரூ.1000 கோடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத்திட்டம் செயல்படுத்தப்படும்
சீர்மிகு நகரங்கள் திட்டங்களுக்கு ரூ.2350 கோடி ஒதுக்கீடு
அம்ருத் திட்டத்தை செயல்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு
கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் வெள்ள நீர் வடிகால் அமைப்புக்கு ரூ.87 கோடி
பொது இடங்களில் சுவரொட்டிகள் இல்லாத நகரமாக சென்னை மாற்றப்படும்
சென்னையில் 3 இடங்களில் ரூ.335 கோடியில் மேம்பாலங்கள் அமைக்கப்படும்
சென்னையில் உள்ள நீர்வழிகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டத்திற்கு ரூ.2371 கோடி
சென்னையுடன் இணைக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ரூ.2056 கோடி
நகர்புற ஊதிய வேலை வாய்ப்பு திட்டம் எனும் புதிய திட்டம் அறிமுகம் - ரூ.100 கோடி ஒதுக்கீடு
நகர்புறங்களில் நீர்நிலைகள் உள்ளிட்டவற்றை புதுப்பிக்க நகர்புற ஏழைகள் பயன்படுத்தப்பட்டு ஊதியம்
மதுரை, கோவை - திருப்பூரில், ஓசூரில் புதிய பெருநகர வளர்ச்சிக்குழுமங்கள் ஏற்படுத்தப்படும்
10 வருடங்களுக்குள் தமிழகம் முற்றிலும் குடிசைகள் அற்ற மாநிலமாக விளங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது
குடிசை மாற்று வாரியத்திற்கு ரூ.3954.44 கோடி ஒதுக்கீடு
புதிய குடிசை மறுகுடியமர்வு மற்றும் புனர்வாழ்வுக் கொள்கை உருவாக்கப்படும்
நாட்டிலேயே அதிக அளவிலான தார் சாலைகள் தமிழகத்தில் தான் உள்ளன
சாலை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.5421.41 கோடி ஒதுக்கீடு
59 நகராட்சிகளில் புறவழிச்சாலை அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும்
சென்னை - கன்னியாகுமரி ஜிஎஸ்டி சாலையை 6 முதல் 8 வழிச்சாலையாக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
மாநில நெடுஞ்சாலைகளை மாவட்ட நெடுஞ்சாலைகளுடன் இணைக்க கூடிய 2200கிமீ சாலைகள் 4 வழிச்சாலையாக்கப்படும்
நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.17,899.17 கோடி ஒதுக்கீடு
சென்னை - குமரி தொழில் பெருவழித்திட்டத்தின் கீழ் ரூ.6448.24 கோடியில் 589கிமீ நீள பெருவழிகள் மேம்படுத்தப்படும்
ரூ.623.59 கோடியில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி உதவியுடன் 1000 புதிய பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு
மெட்ரோ ரயில் திட்டத்தில் கோடம்பாக்கம் - பூந்தமல்லி புறவழித்தட சேவைகள் 2025 ஜூன் மாதம் துவங்கும்
மெட்ரோ ரயிலின் மொத்த 2ம் கட்டமும் 2026ம் ஆண்டு டிசம்பருக்குள் முடிக்கப்படும்
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான விரிவான சாத்தியக்கூறுகள் அறிக்கை தயார் செய்யப்படும்
கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை விரைவில் தொடங்க மத்திய அரசுடன் ஆலோசிக்கப்படும்
தமிழகம் மின்மிகை மாநிலம் என்று கூறப்படும் கூற்று தவறானது
ஏறத்தாழ 2500 மெகாவாட் மின்சாரத்தை மின் சந்தைகளில் இருந்து வாங்கியே அரசு சமாளிக்கிறது
கடந்த சில ஆண்டுகளில் தமிழகம் மின் மிகை மாநிலமாக மாறியுள்ளது என்ற கூற்று தவறானது
அடுத்த 10 வருடங்களில் சொந்த மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 17,980 மெகாவாட் மின் உற்பத்தி கூடுதலாக்கப்படும்
வேளாண் இலவச மின்சாரம், வீட்டிற்கான மின்சாரத்திற்கான மானியத்திற்கு ரூ.19,872 கோடி ஒதுக்கீடு
மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க வல்லுநர் குழு அமைக்கப்படும்
பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.32,599.54 கோடி ஒதுக்கீடு
மலைப்பகுதிகளில் புதிதாக 12 தொடக்கப்பள்ளிகள் துவங்கப்படும், 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்
பள்ளிகளில் மனப்பாட முறைக்கு மாற்றாக சிந்திக்கும் முறைப்படி பாடங்கள் கற்பிக்க நடவடிக்கை
அரசுப்பள்ளி மாணவர்கள் கணினித்திறன்களை இளம் வயதிலேயே உறுதி செய்ய ரூ.114.18 கோடி ஒதுக்கீடு
865 உயர்நிலைப்பள்ளிகளில் ரூ.20.76 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும்
இந்த ஆண்டு புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும்
25 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில் ரூ.10கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
உயர்கல்வித்துறைக்கு ரூ.5369 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஆளில்லா விமானங்களுக்கென புதிய விமானக்கழகம் உருவாக்கப்படும்
தமிழகத்தில் கொரோனா தொடர்பான செலவுகளுக்கு ரூ.241.40 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது
தமிழகத்தில் தினசரி 8 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திறன் உள்ளது
தினசரி 8 லட்சம் பேருக்கு செலுத்தும் திறன் இருந்தும் 2.40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வருகின்றன
தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவம் திட்டம் ரூ.257 கோடியில் துவங்கப்பட்டுள்ளது
டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.959 கோடி ஒதுக்கீடு
108 ஆம்புலன்ஸ் திட்டத்தில் ஆம்புலன்ஸ்களில் எண்ணிக்கை 1303ஆக உயர்த்தப்படும்
முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்திற்கு ரூ.1046.69 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு நகர்புற சுகாதாரத்திட்டத்திற்கு ரூ.741 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு சுகாதார சீரமைப்பு திட்டத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்க ரூ.116 கோடி ஒதுக்கீடு
கலைஞர் முன்மொழிந்த சித்தா பல்கலைக்கழகத்தை உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு
தமிழக சுகாதாரத்துறைக்கு மொத்தம் ரூ.18,933 கோடி ஒதுக்கீடு
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மானியம் வழங்க ரூ.215.64 கோடி ஒதுக்கீடு
15 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.60 கோடி செலவில் திறன் மேம்பாட்டு மையங்கள்
தமிழ்நாட்டு திறன் மேம்பாட்டுக்கழகத்திற்கான மானியமாக ரூ.200 கோடி வழங்கப்பட்டுள்ளது
வணிகம் செய்ய உகந்த மாநிலங்கள் பட்டியலில் 14வது இடத்தில் உள்ள தமிழகத்தை முதல் 3 இடத்திற்குள் கொண்டு வர நடவடிக்கை
தூத்துக்குடியில் ரூ.1000 கோடி செலவில் அறைகலன் பூங்கா அமைக்கப்படும்
தூத்துக்குடியில் அமையும் அறைகலன் பூங்கா 3.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும்
திருவள்ளூர் மாவட்டம் மாநல்லூரில் மின்வாகனப் பூங்கா அமைக்கப்படும்
தொழில் துறையினருக்காக தூத்துக்குடியில் 60எம்எல்டி அளவில் கடல் நீரை குடிநீர்
சென்னை நந்தம்பாக்கம் மற்றும் காவனூரில் நிதிநுட்ப நகரம் அமைக்கப்படும்
நந்தம்பாக்கம் நிதி நுட்ப நகரத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு
விழுப்புரம் திருச்சிற்றம்பலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்
கோவையில் ரூ.225 கோடி செலவில் 500 ஏக்கரில் பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்கா
கோவை பாதுகாப்பு கருவிகள் உற்பத்தி பூங்காக்கள் மூலம் ரூ.3500 கோடி முதலீடு ஈர்க்கப்படும்
திருவண்ணாமலை, விருதுநகர் உள்ளிட்ட தொழில் வளர்ச்சியில் பின்தங்கியுள்ள மாவட்டங்களில் புதிய சிப்காட்
சிப்காட் தொழில் பூங்காக்களில் 4000 ஏக்கர் நிலத்தை மேம்படுத்த ரூ.1500 கோடி
சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் புதிய சுரங்க கொள்கை உருவாக்கப்படும்
பசுமை சுங்க மேல்வரி விதிக்கப்பட்டு ஒரு பசுமை நிதியம் உருவாக்கப்படும்
மகளிர் பேறுகால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக அதிகரிப்பு
6 கோடி வருடங்களுக்கு முந்தைய உள்நாட்டு புதை வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிவ பூங்கா
ரூ.10 கோடியில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் புதைபடிவ பூங்கா
துணிநூல் துறையில் கவனம் செலுத்த ஒரு தனி இயக்குநரகம் உருவாக்கப்படும்
பள்ளி குழந்தைகளுக்கு சீருடைகள் வழங்க ரூ.409 கோடி ஒதுக்கீடு
பொங்கல் பண்டிகை இலவச வேட்டி - சேலை திட்டத்திற்கு ரூ.490 கோடி ஒதுக்கீடு
29 துறைகள் மூலமாக வழங்கப்படும் 600 சேவைகளும் மின்னணு மயமாக்கப்படும்
ரூ.100 கோடியில் 100 கோவில்களில் திருத்தேர், திருக்குளம், நந்தனம் சீரமைக்கப்படும்
12959 கோவில்களில் ஒரு கால பூஜையை உறுதி செய்ய ரூ.130 கோடியில் நிதி நிலை உருவாக்கப்படும்
பழனி முருகன் கோவில் மூலம் ஒரு சித்த மருத்துவக்கல்லூரி உருவாக்கப்படும்
தமிழகத்தில் சாகச மற்றும் சூழல் சுற்றுலா இடங்கள் அடையாளம் காணப்பட்டு மேம்படுத்தப்படும்
சுற்றுலாத்துறைக்கு ரூ.187.59 கோடி ஒதுக்கீடு
பெண்கள் திருமண நிதி உதவி திட்டத்திற்கு ரூ.762.23 கோடி ஒதுக்கீடு
3ம் பாலினத்தவர்கள் ஓய்வூதிய திட்டங்களுக்கு ரூ.1.50 கோடி ஒதுக்கீடு
மகளிர் பேறு கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும்
கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும்
கொரோனாவில் பெற்றோரை இழந்த 5963 குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது
அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48.48 கோடி ஒதுக்கீடு
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு ரூ.2536 கோடி ஒதுக்கீடு
சத்துணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு
ஆதி திராவிடர்கள் சிறப்பு கூறு திட்டத்திற்கான செலவினம் ரூ.14,696 கோடி
தமிழக பழங்குடியினர் துணைத் திட்டத்திற்கு ரூ.1306 கோடி ஒதுக்கீடு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கல்வி முன்னேற்றத்திட்டத்திற்கு ரூ.1884 கோடி
ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான முனைவர் படிப்புக்கான ஆண்டு உதவித் தொகை ரூ.1 லட்சமாக உயர்வு
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலனுக்கு ரூ.4142 கோடியாக உயர்த்தி ஒதுக்கீடு
4.25 லட்சம் சிறுபான்மையின பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நிதி உதவி செல்வதை உறுதி செய்ய நடவடிக்கை
சிறுபான்மையின மாணவர்கள் நிதி உதவித் திட்டங்களுக்கு ரூ.114.65 கோடி
மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6கோடி வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் பராமரிப்புத் தொகைக்கு காத்திருக்கும் தகுதியுள்ள 9173 பேருக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை
சிறுபான்மையின மாணவர்கள் நிதி உதவித் திட்டங்களுக்கு ரூ.114.65 கோடி
மசூதி, தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6கோடி வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு
மாற்றுத் திறனாளிகள் பராமரிப்புத் தொகைக்கு காத்திருக்கும் தகுதியுள்ள 9173 பேருக்கு ரூ.1500 வழங்க நடவடிக்கை
மாற்றுத் திறனாளிகள் பராமரிப்பு தொகை திட்டத்திற்கு ரூ.404 கோடி ஒதுக்கீடு
அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் ரூ.3 கோடி செலவில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.225 கோடியாக நிதி ஒதுக்கீடு உயர்வு
தமிழகம் சார்பில் டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது
பணியில் இருக்கும் போது உயிரிழக்கும் அரசு ஊழியர் குடும்பத்திற்கான குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5லட்சமாக உயர்வு
அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான கட்டணம் மாதம் ரூ.110ஆக உயர்வு
அரசு ஊழியர் குடும்ப பாதுகாப்பு நிதி திட்டத்திற்கான கட்டணம் மாதம் ரூ.110ஆக உயர்வு
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவற்கான வழிமுறைகள் தீவிரமாக பரிசீலிக்கப்படுகின்றன
குடும்பத் தலைவியாக இருக்கும் பெண்களுக்கு மட்டுமே உரிமைத் திட்டம் என்பது தவறான தகவல்
குடும்பத் தலைவியாக இருந்தால் மட்டுமே உரிமைத் தொகை என்று தவறாக கருதி ரேசன் அட்டைகளில் குடும்பத் தலைவர்களை மாற்றுகின்றனர்
பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தை பெற ரேசன் கார்டுகளில் குடும்பத் தலைவர்களை மாற்ற வேண்டியது இல்லை
பெண்கள் உரிமைத் தொகை திட்டம் மிகவும் ஏழ்மையானவர்களுக்கானதாகும்
பெண்கள் உரிமைத் தொகை திட்டத்தை பணக்காரர்களுக்கும், சம்பளம் வாங்குபவர்களுக்கும் வழங்க கூடாது என விமர்சனங்கள் எழுந்தன
ஏழை பெண்களுக்கு உரிமைத் தொகை சென்றடைவதை உறுதி செய்ய தகுதி வாய்ந்த குடும்பங்களை கண்டறிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகிறது
கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன், சுய உதவிக்குழுக்களுக்கான கடன்களை தள்ளுபடி செய்ய முன்னுரிமை
மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும்
விவசாய நகைக்கடன்களில் அடமானம் வைக்கப்பட்ட நகைகளின் தரத்தில் முறைகேடு செய்யப்பட்டுள்ளது
பெட்ரோல் மீது விதிக்கப்படும் வரியை ரூ.3 அளவிற்கு குறைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்
முறைகேடுகளை களைந்து நகைக்கடன் தள்ளுபடி நடவடிக்கையை தமிழக அரசு செயல்படுத்தும்
பெட்ரோல் மீதான வரியை ரூ.3 அளவிற்கு குறைப்பதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1160 கோடி வருவாய் இழப்பு
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வரி விகிதத்தை அதிகரிப்பதே மிக முக்கிய சீர்திருத்தமாக இருக்கும்
வணிக வரி, பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்து துறை, ஆயத்தீர்வை துறையில் வரி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டியுள்ளது
வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு, மோட்டார் வாகன வரி, ஆயத்தீர்வைகள் வரி நிர்வாகம் சீரமைக்கப்படும்
ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இணங்க வணிகவரி மாவட்டம் இருக்கும் வகையில் நடவடிக்கை
விலைப்பட்டியல் வியாபாரிகள் உள்ளிட்ட வரி ஏய்ப்பு செய்தோர் மீது குற்றவியல் நடவடிக்கை
மதிப்பு கூட்டு வரி உள்ளிட்ட பழைய வரிகளில் உள்ள ரூ.28000 கோடியை வசூலிக்க சமாதான் திட்டம்
Comments