தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட திட்டம் - போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்
தமிழகத்தில் விரைவில் மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் 4 வழித்தடங்களில் செல்லக்கூடிய 7 பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போக்குவரத்துத் துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும் மக்கள் சேவைக்காக புதிய பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், ஜெர்மனியில் இருந்து மின்சார பேருந்துகள் வாங்குவதற்கு பேச்சுவார்த்தை நடந்து வருவதாகத் தெரிவித்தார்.
Comments