அண்டார்டிக்காவில் ஒன்றோடு ஒன்று மோதிய பனிப்பாறைகள்

0 3095

அண்டார்க்டிகாவில் பிரமாண்ட பனிப்பாறை ஒன்று மற்றொரு பனிப்பாறையுடன் மோதிக்கொண்டது.

ஏ 74 என்ற பெயர் கொண்ட அந்த பனிப்பாறை ஆயிரத்து 280 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. இந்தப் பாறையின் பயணத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கடந்த 6 மாதங்களாக கவனித்து வந்த நிலையில் வெஸ்ட் ப்ரண்ட் என்ற இடத்தில் ஏ 74 மோதி நிலை கொண்டது.

தற்போது பனிப்பாறைகள் மோதல் தொடர்பான செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது. வெட்டல் கடல் பகுதியில் இருந்த பிரமாண்ட பனிப்பிரதேசத்தில் இருந்து  கடந்த ஜனவரி மாதம் ஏ 74 பனிப்பாறை தனியாகப் பிரிந்து சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments