வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெள்ளம், மின்னல் தாக்கியதில் 71 பேர் உயிரிழப்பு

0 2609

வட இந்தியாவின் பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு மற்றும் மின்னல் தாக்கியதில் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜூலை 19 முதல் பெய்து வரும் பருவமழையால் இமாச்சலப் பிரதேசத்தின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் பதான்கோட், ஜம்மு நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டுள்ளது. தாவி என்ற இடத்தில் மின்னல் தாக்கியதில் இரு சிறுவர்கள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர்.

இதேபோல் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசத்திலும் மின்னல் தாக்கி 42 பேர் வரை பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அலகாபாத்தில் 14 பேரும், ஜெய்ப்பூரில் 12 பேரும் மின்னல் தாக்கி உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments