மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் எடுப்பதில் மோதல் ; மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடந்த மோதலால் பதற்றம்
தஞ்சை மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினருக்கும், வணிகர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் மோதி கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தஞ்சை மாநகராட்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தில் 93 கடைகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கான ஏலம் 2ஆம் நாளாக இன்றும் நடைபெற்றது. ஏலம் எடுப்பதில் அரசியல் கட்சியினருக்கும், வணிகர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது வெளியே இருந்த வணிகர்கள் சிலர் திடீரென, ஏலம் நடந்து கொண்டிருந்த மாநகராட்சி அலுவலக கட்டடத்திற்குள் புகுந்ததால், அரசியல் கட்சியினருடன் மோதல் ஏற்பட்டது. மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் மோதிக்கொண்டதால், பதட்டமான சூழல் உருவானது. இதனையடுத்து, காவல்துறையினரால் வணிகர்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.
Comments