அன்னைத் தமிழில் அர்ச்சனைக்கான போற்றி பாடல் நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அன்னைத் தமிழில் அர்ச்சனைக்கான போற்றி பாடல் நூல்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
முதற்கட்டமாக, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள 47 முதுநிலை கோயில்களில் அர்ச்சகர்களின் விவரங்கள் அடங்கிய பதாகைகள் வெளியிடப்பட்டு, தமிழில் அர்ச்சனை செய்யப்பட்டு வருகிறது. இதன்மூலம், தமிழில் வழிபட வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, தமிழில் அர்ச்சனை மற்றும் வழிபாடு செய்ய ஏதுவாக 12 இறைவன் போற்றி பாடல் நூல்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்.
இறைவனின் பெருமைகளையும் பதிகம் மற்றும் பாடல்களால் உயர்வாக 'ஒப்புமை செய்து' போற்றுவதற்கு போற்றி நூல்கள் வழிவகுக்கும் என்று அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments