ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த 2 பெண்கள் உள்பட 7 பேர் கைது

0 3559

ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி 12 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு போலியான பணி நியமன ஆணை கொடுத்து ஏமாற்றிய வழக்கில் 2 பெண்கள் உள்பட 7 நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை அன்னனூரை சேர்ந்த புருஷோத்தமன் காவல் ஆணையரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து போலி பணி நியமன ஆணைகள், கணினி ஹார்டிஸ்க் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

அரசியல் பிரமுகர்கள், அரசு உயரதிகாரிகள் தொடர்பு உள்ளதாக கூறி அவர்களுடன் எடுத்த போட்டேவை காட்டி ஏமாற்றும் புரோக்கர்களை நம்ப வேண்டாம் என்று காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments