குத்துச்சண்டை வீராங்கனை லாவ்லினாவுக்கு டிஎஸ்பி பதவி - அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா
ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லாவ்லினா போர்கோஹைனுக்கு காவல்துறையில் டிஎஸ்பி பதவி வழங்குவதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா அறிவித்துள்ளார்.
அசாம் தலைநகர் குவஹாத்தியில் ஒரு சாலைக்கு லாவ்லினாவின் பெயர் சூட்டப்படும் என்றும் அவரது சொந்த ஊரான கோலாகாட்டில்((Golaghat)) லாவ்லினா பெயரில் விளையாட்டு அரங்கம் கட்டப்படும் எனவும், லாவ்லினாவுக்கு அரசு சார்பில் அளிக்கப்பட்ட பாராட்டு விழாவில் முதலமைச்சர் அறிவித்துள்ளார். லாவ்லினாவின் பயிற்சியாளருக்கு அசாம் அரசு 10 லட்சம் ரூபாய் நிதி வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments