சென்னையில் 60 சதவீதம் பேர் முகக்கவசம் அணியாதது வருத்தம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2323

சென்னையில் 60 சதவீதம் பேர் முக்ககவசம் அணியாதது வருத்தமளிப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளத்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாம் அன்றாடம் பயன்படுத்தும் உடைகள், காலணி போன்று முகக்கவசம் அணிவதையும் கட்டாயமாகியுள்ளதாக கூறினார்.

கொரோனா தொற்று அதிகரிப்பதற்கு பண்டிகை காலங்கள் முக்கிய காரணியாக இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர், அனைவரும் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்ட 11 மருத்துவக் கல்லூரிகளிலுள்ள 1550 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை இந்தாண்டே துவங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments