உத்தரப் பிரதேசத்தில் கனமழை ; யமுனை, கங்கை ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளப் பெருக்கு
உத்தரப் பிரதேசத்தில் கனமழையாலும் ஆறுகளில் கரைபுரண்டு வெள்ளம் பாய்வதாலும் ஆயிரத்து இருநூற்றுக்கு மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கங்கையிலும், அதன் துணையாறான யமுனையிலும் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால் படித்துறைகள் அனைத்தும் மூழ்கி ஊருக்குள் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. மிர்சாபூர், பிரயாக்ராஜ், ஜலான், பாண்டா, ஹமீர்பூர் உள்ளிட்ட 23 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளப் பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படை, மாநிலப் பேரிடர் மீட்புப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 59 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
தெருக்களில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பாயும் இடங்களில் படகுகள் மூலம் ஆட்களை மீட்கும் பணிகள் நடைபெறுகின்றன. விமானப்படையின் ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
Comments