மதுபோதையில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற தொழிலாளி

0 4745
மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநில இளைஞர் அடித்துக் கொலை

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில், மதுபோதையில் தனது மனைவியிடம் தவறாக நடக்க முயன்ற வடமாநில இளைஞரை அடித்துக் கொன்ற தொழிலாளி காவல்நிலையத்தில் சரண் அடைந்தார்.

கோவிந்தம்மாள் நகரை சேர்ந்த சுந்தரம்,பனமரத்துப்பட்டியில் வசித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரசன் குமார் மண்டேலுடன் இணைந்து மது அருந்துவது வழக்கம் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் சுந்தரத்தின் வீட்டிற்கு மதுபோதையில் வந்த பிரசன் குமார், சுந்தரத்தை மதுவாங்க வெளியே அனுப்பி விட்டு அவரது மனைவியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனை அறிந்து கோபமடைந்த சுந்தரம்,அருகில் கிடந்த விறகு கட்டையால் பிரசன் குமாரை தாக்கியதில் அவன் உயிரிழந்ததை அடுத்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்தார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments