இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியுடன் நடிகர் விஜய் சந்திப்பு
சென்னையில் படபிடிப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியும், நடிகர் விஜய்யும் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படத்தின் படபிடிப்பு சென்னையிலுள்ள தனியார் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது.
பீஸ்ட் படத்தின் படபிடிப்பு நடக்கும் அதே ஸ்டூடியோவில், 2 நாட்களுக்கு முன் தோனி நடிக்கும் விளம்பரத்திற்கான படபிடிப்பும் நடந்துள்ளது. அப்போது தோனியும், விஜய்யும் சந்தித்துக் கொண்டதோடு, புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர்.
Comments