நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு.... பதற வைத்த தெருக்கூத்து கலைஞனின் பரிதாப முடிவு
சினிமாவின் பிரபல மூத்த கலைஞர்கள் பலரும் நடித்து கொண்டிருக்கும்போதே மரணித்து விட வேண்டுமென்பது தங்களின் ஆசையாக இருப்பதாக கூறுவார்கள்.
அந்த வகையில், நடித்துக் கொண்டிருக்கும் போதே ஒரு எளிய தெருக் கூத்து கலைஞன் மாரடைப்பால் இறந்தது, வேலூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் பரவியுள்ள கொரோனாவால் ஆடிப்பெருக்கு விழா தடை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஆடிப்பெருக்கு விழாவின்போது பல கிராமப்புற பகுதிகளில் தெருக்கூத்துகள் நடைபெறும்.
அந்த வகையில் , வேலூரில் உள்ள அணைக்கட்டு என்ற இடத்தில் கமலநாதன் என்பவர் வேடம் போட்டு நடித்து கொண்டிருந்தார்.அர்ஜுன் தவசி தெருக்கூத்து நாடகத்தில் அவர் நடித்துக்கொண்டிருந்தார்
நடித்துக் கொண்டிருக்கும் போதே கமலநாதன் திடீரென தலை குப்புற மண்ணில் சாய்ந்து விழுந்துள்ளார். அதிர்ச்சியடைந்த சக கலைஞர்கள் அவரை எழுப்ப முயற்சித்தும் போது அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தது தெரிய வந்துள்ளது.
தெருக்கூத்து நாடகத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த நாடக நடிகர் கமலநாதனுக்கு நாடக நடிகர்கள் மற்றும் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமலநாதன் நடித்துக் கொண்டிருக்கும் போதே கீழே விழுந்து இறந்த வீடியோ காட்சியை நடிகர் சங்கம் ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது. இந்த உருக்கமான காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Comments