தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணம் மாற்றியமைப்பு
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, தீவிரமில்லாத கொரோனா சிகிச்சைக்கு முதலில் தினசரி 5ஆயிரம் ரூபாய் கட்டணமாக இருந்த நிலையில், தற்போது 3ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைக்கு தினசரி கட்டணம் 15,000 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 7,000 ரூபாயாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வெண்டிலேட்டருடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு தினசரி 56,200 ரூபாயும், வெண்டிலேட்டர் இல்லாத தீவிர சிகிச்சைக்கு தினசரி 27,100 ரூபாய் தொகுப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கான உணவு மற்றும் கிருமிநாசினிக்கான தொகையும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
Comments