நிதிசுமை இருந்தாலும் தமிழகத்தில் தற்போதைய சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது - அமைச்சர் ராஜகண்ணப்பன்

0 2900

மிழகத்தில் தற்போதைய சூழலில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் புதிய வழித்தடங்கள் மற்றும் நிறுத்தப்பட்டிருந்த வழித்தடங்களில், 23 மாநகரப் பேருந்துகள் இயக்கத்தினை தொடங்கி வைத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆட்சியில் நிர்வாக சீர்கேடு காரணமாக கடன் சுமை ஏற்பட்டுள்ளதாகவும், நிதி சுமை இருந்தாலுமே பேருந்து கட்டணத்தை உயர்த்தும் எண்ணம் தற்போது இல்லை எனவும், தேவையற்ற செலவுகளை குறைத்து வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மகளிருக்கான இலவச பயண திட்டம் மூலம் நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதலாக 21சதவீதம் பெண்கள் பயனடைவதாகவும், இதனால், கூடுதலாக 150 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments