வரியை வசூலிப்பதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகளுக்கு, தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா ? - உயர்நீதிமன்றம் கேள்வி
அரசுக்கு வரவேண்டிய வரியை வசூலிப்பதில் மெத்தனம் காட்டும் அதிகாரிகளுக்கு, 4 நாட்கள் தாமதமாக ஊதியம் வழங்கினால் ஏற்றுக்கொள்வார்களா என உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ஏராளமான தொழிலதிபர்கள் வெளிநாட்டிலிருந்து சொகுசு கார்களை இறக்குமதி செய்த நிலையில், நுழைவு வரியிலிருந்து விலக்கு கோரியிருந்தனர். இது தொடர்பான வழக்கு நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
வெளிநாட்டுக் காருக்கான நுழைவு வரி விலக்கு சம்பந்தபட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தால் 2018 ஆம் ஆண்டே தள்ளுபடி செய்யப்பட்டுவிட்ட போதும் வரியை வசூலிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், சொகுசு கார் சம்பந்தப்பட்ட அனைத்து வழக்குகளுக்கும் ஆகஸ்டு 16ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
Comments