நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஓபிசி மசோதா நிறைவேற்றம் ; குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பின் சட்டமாக அமல்
மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் ஓபிசி சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது. எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளித்ததால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மையுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்களே அடையாளம் கண்டு பட்டியலை உருவாக்க அதிகாரம் அளிக்கும் விதத்தில் ஓபிசி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதால் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு சட்டமாக நடைமுறைப்படுத்தப்படும்.
Comments