நெய்வேலியில் சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு ; 4 லாரிகளுக்கு தீ வைப்பு
நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் இருந்து சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி மோதி ஒருவர் பலியானதால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் 4 லாரிகளுக்கு தீ வைத்தனர்.
மேலக்குப்பத்தை சேர்ந்த 50 வயதான கோவிந்தன் சாலையில் சென்று கொண்டிருந்த போது, ஜெயங்கொண்டம் சிமெண்ட் ஆலைக்கு சாம்பல் ஏற்றிச் சென்ற லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நிலக்கரி சுரங்கம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 4 லாரிகளுக்கு தீ வைத்தனர். 5 லாரிகளின் கண்ணாடிகளையும் அடித்து உடைத்தனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. என்எல்சி தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வன்முறையில் ஈடுபட்ட நபர்கள் குறித்து நெய்வேலி தெர்மல் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Comments