அரியவகை எலும்பு சிதைவு நோய் ; 57 முறை எலும்பு முறிவால் பாதிக்கப்பட்ட சிறுவன்
கரூரில் எலும்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்டு, இதுவரை 57 முறை எலும்பு உடைந்துள்ளதாகக் கூறப்படும் 11 வயது சிறுவனுக்கு சிகிச்சை அளிக்க போதிய வசதியின்றி பெற்றோர் தவித்து வருகின்றனர்.
ராயனூர் அசோக் நகரைச் சேர்ந்த சஞ்சய்க்கு பிறந்து 7 வது நாள் முதலே "ஆஸ்டியோ ஜெனிசிஸ் இன்பர்பேக்டா"என்றழைக்கப்படும் எலும்பு சிதைவு நோய் ஏற்பட்டுள்ளது. மரபணுப் பிறழ்ச்சி வகையைச் சேர்ந்த இந்த நோய் எலும்புகளை பாதித்து, நடந்தாலோ, ஓடினாலோ கைகளிலும் கால்களிலும் எலும்பு முறிவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில் சஞ்சய்க்கு இதுவரை 57 முறை எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், 16 லட்ச ரூபாய் வரை செலவு செய்து அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் பெற்றோர் கூறுகின்றனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஊசியைப் போட்டால் மட்டுமே சிறுவன் எழுந்து நடமாட முடியும் என்று கூறும் அவர்கள், அரசோ, தனியார் அமைப்புகளோ உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
Comments