ஹிமாச்சலில் நிலச்சரிவு - 10க்கும் மேற்பட்ட உடல்கள் மீட்பு : 50க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்க வாய்ப்பு

0 4903
இமாச்சலப் பிரதேசத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 60 பேர் வரை மண்ணில் புதைந்திருக்கக் கூடும் என்றும், ராணுவம், துணை ராணுவம் ஆகியவற்றின் உதவியுடன் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சலப் பிரதேசத்தில் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 14 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 60 பேர் வரையில் நிலச்சரிவில் சிக்கியிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ரெக்காங் பியோ - ஷிம்லா நெடுஞ்சாலையில் மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதில் 30 இருக்கைகள் கொண்ட பேருந்து, 4 கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இடிபாடுகளில் இருந்து 14 பேர் உயிருடனும், 10க்கும் மேற்பட்டோர் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். 25க்கும் அதிகமானோரை காணவில்லை என அஞ்சப்படுகிறது.

ராணுவம், காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஹிமாச்சல் முதலமைச்சர் ஜெய்ராம் தாக்கூரை தொடர்பு கொண்ட, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், மீட்பு பணிகளில் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments