பஞ்சாப் எல்லையில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும்: அமைச்சர் அமித் ஷாவிடம் பஞ்சாப் முதல்வர் கோரிக்கை

0 3422

பாகிஸ்தான் தரப்பில் இருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரிப்பதால், பிஎஸ்எஃப் வீரர்களுக்கு ஆன்டி டிரோன் உபகரணங்களை வழங்குவதுடன், பாகிஸ்தான் தீவிரவாதிகளை சமாளிக்க 25 கம்பெனி மத்திய ஆயுத போலீஸ் படையை அனுப்புமாறு  உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

பஞ்சாபிற்குள் தீவிரவாதிகள் ஆயுதங்களையும், ஐஇடி வெடி பொருட்களையும் கடத்துவது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சுதந்திர தினம் மற்றும் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பஞ்சாபில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக, டெல்லியில் அமித் ஷாவை சந்தித்த போது கூறினார்.

எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அவர் அமித் ஷாவிடம் கேட்டுக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments