பொழுதுபோக்கிற்காக உருவாக்கப்பட்ட ரோபோட்: தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவுகிறது
இந்தோனேசியா பல்கலைக்கழக விரிவையாளர்கள் குழு உதவியுடன் பொழுதுபோக்கிற்காக உருவாக்கிய ரோபோட், தற்போது கொரோனா தொற்றால் தனிமைப் படுத்தப்பட்டவர்களுக்கு உதவ பயன்படுத்தப்படுகிறது.
சூரபயா நகரத்தை சேர்ந்த சமூக தலைவர் அஸியான்டோ என்பவர், விரிவுரையாளர்கள் குழு உதவியுடன் ரிமோட் மூலம் இயங்கும் ரோபோட்டை, வீட்டில் இருக்கும் கழிவு பொருட்களை கொண்டு உருவாக்கியுள்ளார்.
டெல்டா ரோபோட் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த ரோபோட், நோயாளிகளுக்கு தேவையான மருந்துகள், உணவு பொருட்களை வீட்டிற்கு சென்ற வழங்குவதுடன், தெருக்களில் கிருமிநாசினி மருந்தும் தெளித்து வருகிறது.
Comments