எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான கே.சி.பி. நிறுவனத்தில் 2வது நாளாக சோதனை..

0 2846
கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நெருங்கிய நண்பர் எனக் கூறப்படும் சந்திரபிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் 2-ஆவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

எஸ்.பி.வேலுமணி அமைச்சராக இருந்த போது, தனக்கு நெருக்கமானவர்கள் நடத்தி வரும் நிறுவனங்களுக்கு, முறைகேடாக டெண்டர் வழங்கியதாக எழுந்த புகாரில் சந்திரபிரகாஷ் என்பவரின் கே.சி.பி. இன்ஜினியர்ஸ் நிறுவனம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில், கோவை பீளமேட்டிலுள்ள கேசிபி இஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் நேற்று 2 தளங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில், எஞ்சிய ஒரு தளத்தில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments