மாநிலங்களவையில் பாஜக எம்பிக்கள் ஆப்சென்ட்.. பிரதமர் மோடி அதிருப்தி..!
மாநிலங்களவையில் முக்கிய மசோதா குறித்த வாக்கெடுப்பு நடந்த வேளையில், பல பாஜக எம்பிக்கள் அவைக்கு வராததால் அதிருப்தி அடைந்துள்ள பிரதமர் மோடி அப்படி வராதவர்கள் குறித்த பட்டியலை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடுவர் மற்றும் சமரச தீர்வு திருத்த மசோதா கடந்த திங்கள் கிழமை மாநிலங்களைவையில் கொண்டு வரப்பட்டது. அப்போது , எதிர்க்கட்சி எம்பிக்கள் கொண்டு வந்த சில தீர்மானங்கள் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது ஆளுங்கட்சி வரிசை காலியாக இருந்த தாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியுற்ற மோடி அவைக்கு வராத எம்பிக்களின் பட்டியலை தருமாறு நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு உத்தரவிட்டார்.
இதன் எதிரொலியாக செவ்வாய்க்கிழமை, ஓபிசி பட்டியல் தொடர்பாக கொண்டுவரப்பட்ட 127 ஆவது அரசியல் சட்ட திருத்த மசோதாவின் போது பாஜக எம்பிக்கள் அனைவரும் அவையில் ஆஜராயினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments