டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரசால் நோய் தொற்று அதி வேகமாக பரவவில்லை - மத்திய அரசு
டெல்டா பிளஸ் மரபணு மாற்ற வைரசால் நோய் தொற்று அதி வேகமாக பரவவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது வரை நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் 86 மாதிரிகளில் மட்டுமே டெல்டா பிளஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையத்தின் தலைவரான சுஜித் சிங், தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலைக்கு காரணமான டெல்டா வைரசுக்கு மற்ற எல்லா கொரோனா வைரசுகளையும் விட வேகமாக பரவும் திறன் உள்ளது என நிதி ஆயோக் மருத்துவ உறுப்பினர் Dr.வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
பல நாடுகளில் டெல்டா வைரஸ் காரணமாகவே நோய் தொற்று அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், டெல்டா வைரசால் ஏற்படும் தீவிர நோய் மற்றும் இறப்புகளை தடுக்க தடுப்பூசியால் இயலும் எனவும் தெரிவித்துள்ளார்.
Comments