"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
நடிகை மீரா மிதுன் விரைவில் கைது?
தாழ்த்தப்பட்ட சமூக இயக்குனர்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக எழுந்த புகாரில் சிக்கிய சர்ச்சை நடிகை மீரா மிதுனை விசாரணைக்கு ஆஜராகக் கூறி சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பட்டியல் இன சமூகத்தினர் தான் அனைத்து குற்றச்செயல்களிலும் ஈடுபடுவதாகவும், திரைத்துறையில் இருக்கும் அந்த சமூகத்தினரை வெளியேற்ற வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் நடிகை மீரா மிதுன் பேசிய வீடியோ வெளியானதை அடுத்து, அவர் மீது சாதி விரோதத்தை தூண்டுவது, இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குவது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், மீரா மீதுனை நாளை விசாரணைக்கு ஆஜராகக் கூறி சென்னை சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Comments