டி.என்.பி.எல். கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு திருச்சி அணி தகுதி

0 3482

டி.என்.பி.எல். முதலாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள திருச்சி அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது. இதையடுத்து முதலில் களம் இறங்கிய சேப்பாக் அணி 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. பவுண்டரிகள், சிக்ஸர்களாக விளாசிய ராதாகிருஷ்ணன் 82 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்

தொடர்ந்து ஆடிய திருச்சி அணி ஒரு பந்து மீதமிருக்கையில், 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. நிதிஷ் ராஜகோபால் 55 ரன்களும், ஆதித்ய கணேஷ் 66 ரன்களும் விரைந்து எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments