இயற்கை முறையில் ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு உற்பத்தி செய்து சாதனை படைத்த விவசாயி..
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே விவசாயி ஒருவர் இயற்கை முறையில் விவசாயம் செய்து ஒரு ஏக்கருக்கு 90 டன் கரும்பு உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளார்.
புளியங்குடியை சேர்ந்த அந்தோணிசாமி என்பவர் செயற்கை உரங்கள், கலப்பின விதைகள், செயற்கை வளர்ச்சியூட்டிகள் உள்ளிட்டவற்றை தவிர்த்து முற்றிலும் பசும் தாள் உரங்கள், இயற்கை கழிவுகள், மாட்டு சானம் உள்ளிட்ட இயற்கை உரங்களை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்துள்ளார்.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் அரசும் பல்வேறு சலுகைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
Comments