"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
கழிவு நீரை சுத்திகரித்து தண்ணீர் தேவையில் சுமார் 40 சதவிகிதம் சுத்தமான நீரை தயாரிக்கும் சிங்கப்பூர்..
சிங்கப்பூரின் தண்ணீர் தேவையில் சுமார் 40 சதவிகிதம் மறுசுழற்சி செய்யப்பட்ட கழிவு நீரில் இருந்து பெறப்படுவதாக சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.
57 லட்சம் மக்கள் தொகை உள்ள சிங்கப்பூரில் நல்ல நீருக்கான ஆதாரங்கள் மிகவும் குறைவாக உள்ளது. நல்ல தண்ணீருக்காக பக்கத்தில் உள்ள மலேசியாவை நீண்ட நாட்களாக நம்பி இருந்த சிங்கப்பூர் இப்போது பிரம்மாண்டமான சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவி, கழிவு நீரில் இருந்து தூய்மையான தண்ணீரை உற்பத்தி செய்கிறது.
இதில் பெரும்பங்கு தொழிற்சாலை தேவைகளுக்கு போனாலும், எஞ்சியது குடிநீர் ஆதாரங்களில் சேமிக்கப்படுகிறது. உலக நாடுகளில் 80 சதவிகித கழிவு நீர் கடலில் விடப்பட்டு பெரும் சுற்றுச்சூழல் மாசு எற்படும் நிலையில், சிங்கப்பூரின் கழிவு நீர் மறுசுழற்சி காரணமாக அதைச் சுற்றிய பகுதிகளில் கடல் மாசடைதல் பெருமளவில் தவிர்க்கப்படுகிறது.
Comments