இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

0 2525
இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து விப்ரோ நிறுவன தலைவருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக ஆலோசனை நடத்தினார்.

இளைஞர்களுக்கான புதிய வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், இளைஞர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி வழங்குவது குறித்து விப்ரோ நிறுவன தலைவர் அசிம் பிரேம்ஜியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனையின் போது தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments