பெகசஸ் குறித்து சமூக ஊடகங்களில் விவாதம் நடத்த கூடாது - உச்ச நீதிமன்றம்
பெகசஸ் உளவு பற்றி புகார் அளித்துள்ளவர்கள் நீதிமன்றத்தை நம்ப வேண்டும் எனவும், நீதிமன்ற விசாரணை நடக்கும் போது, சமூக ஊடகங்களில் அது குறித்த விவாதங்களை நடத்த கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பெகசஸ் உளவு குறித்து விசாரணை கோரி தாக்கலான மனுக்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்வி ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய தலைமை நீதிபதி என்வி ரமணா, ஊடகங்களில் என்ன பேசினாலும் சரி, வழக்கு என்று வந்து விட்டால் இங்கு மட்டுமே அது குறித்த விசாரணை நடக்க வேண்டும் என்பதுடன் நீதிமன்றம் எழுப்பும் கேள்விகளுக்கு அரசு பதிலளிக்கும் என எதிர்பார்ர்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
தங்களது பெகசஸ் உளவு மென்பொருளை அரசுகளுக்கு மட்டுமே விற்பதாக அதன் உரிமையாளரான இஸ்ரேலிய நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் பெகசஸ் நிறுவனத்துடன் எந்தவிதமான பரிவர்த்தனையும் நடத்தவில்லை என மத்திய அரசு சார்பில் பாதுகாப்பு அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
Comments