விரைவில் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்துகிறது ஹீரோ மோட்டோகார்ப்..!

0 4628

பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்கூட்டர் குறித்த தொழில்நுட்ப விவரங்கள் எதையும் வெளியிடாவிட்டாலும், விரைவில் ஸ்கூட்டர் சந்தைக்கு வரும் என ஹீரோ மோட்டார்கார்ப் தலைவர் பவான் முஞ்சால் தெரிவித்துள்ளார்.

தைவான் நிறுவனமான Gogoro வின் பேட்டரி மாற்றும் தொழில்நுட்பம் இதில் பயன்படுத்தப்படும் எனவும் கூறப்படுகிறது. பவான் முஞ்சாலின் சகோதரரும், ஹீரோ எலக்ட்ரிக் நிறுவனத்தின் உரிமையாளருமான நவீன் முஞ்சால் ஏற்கனவே மின்சார இருசக்கர வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு வெளியிட்டுள்ளார்.

எனவே ஹீரோ மோட்டார்கார்ப்பின் மின்சார ஸ்கூட்டருக்கு ஹீரோ என்ற பெயரை பயன்படுத்துவது தொடர்பாக சகோதரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments