மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி - உலக சுகாதார நிறுவனம்

0 4704
மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் முதலாவது மார்பர்க் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனமான WHO தெரிவித்துள்ளது.

எபோலா வைரசுடன் தொடர்புடைய இந்த நோய் வந்தால் இறப்பு விகிதம் 88 சதவிகிதம் வரை இருக்கும் என்பதுடன், இந்த வைரஸ், வவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்கு பரவக்கூடியது என்றும் WHO தெரிவித்துள்ளது. ஏற்கனவே பல ஆப்பிரிக்க நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. ஆனால் முதன் முறையாக மேற்று ஆப்பிரிக்காவில் அதன் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குகை அல்லது சுரங்கங்களில் வசிக்கும் ரவுசெட்டஸ் வகை வவ்வால்களிடம் இருந்து பரவும் மார்பர்க் வைரஸ், மனிதர்களுக்கு இடையே, உடல் திரவங்கள் அல்லது வைரஸ் படிந்த பொருட்கள் வாயிலாக பரவும் என WHO எச்சரிக்கை விடுத்துள்ளது. கினியாவில் இந்த உயிர்க்கொல்லி வைரஸ் அதிகமாக பரவினாலும், அதன் பரவல் உலக அளவில் குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments