''ஒரு தடகள வீராங்கனையின் உண்மையான தியாகம்..'' ஒலிம்பிக் போட்டியின் போது சகோதரியை இழந்த தமிழக வீராங்கனை தனலட்சுமிக்கு ஹிமா தாஸ் ஆறுதல்
ஒலிம்பிக் போட்டியின் போது சகோதரியை இழந்த தமிழக தடகள வீராங்கனை தனலட்சுமிக்கு ஆறுதல் தெரிவித்துள்ள ஹிமா தாஸ், ஒரு தடகள வீராங்கனையின் உண்மையான தியாகம் என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்காக டோக்கியோ சென்றிருந்த திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை தனலட்சுமியிடம் அவரது சகோதரி உடல்நலக்குறைவால் உயிரிழந்ததை உறவினர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.
போட்டிகள் முடிந்து வீடு திரும்பிய தனலட்சுமி, சகோதரியின் மறைவை அறிந்து விமான நிலையத்திலேயே கதறி அழுதார். இந்த நிலையில், தனலட்சுமியின் சகோதரி மறைவுக்கு தடகள வீராங்கனை ஹிமா தாஸ், ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Comments