சமையல் எண்ணெய் உற்பத்தியில் சுயசார்பை எட்ட திட்டம் - பிரதமர் மோடி
சமையல் எண்ணெய் உற்பத்தியில் தன்னிறைவை எட்டும் நோக்கில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தேசிய சமையல் எண்ணெய் மற்றும் எண்ணெய் பனைத் திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மோடி, தற்போது நாட்டில் சமையல் எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு இறக்குமதியாவதாகவும், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதியில் பாமாயில் 55 சதவிகிதம் என்ற அளவுக்கு உள்ளது என்றார். சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை செலவிடுவதாக குறிப்பிட்ட மோடி, புதிய திட்டத்தின் மூலம் அந்த பணம் எண்ணெய் பனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சென்றடைய வேண்டிய ஒன்றும் கூறினார்.
விவசாயிகள் எண்ணெய் பனை சாகுபடி செய்வதை மத்திய அரசு ஊக்கப்படுத்தும் என்ற மோடி, அதன் வாயிலாக தரமான விதைகள் கிடைக்கவும், சமையல் எண்ணெய் உற்பத்தியில் சுய சார்பை எட்ட தேவையான அறிவியல் ரீதியான உதவிகளை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
Comments