கடந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் பாஜகவின் வருமானம் 50 சதவீதம் உயர்வு -தேர்தல் ஆணையம் தகவல்

0 3746

டந்த நிதியாண்டை விட நடப்பு நிதியாண்டில் பாரதிய ஜனதா கட்சியின் வருமானம் 50 விழுக்காடு உயர்ந்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018-19ம் நிதியாண்டில் பாஜக வருமானம் 2,410 கோடி ரூபாயாக இருந்தது. இந்தத் தொகை 2019-20ம் நிதியாண்டில் 50 விழுக்காடு உயர்ந்து 3,623 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை காங்கிரஸ் கட்சியின் வருமானத்தை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காங்கிரசின் வருமானம் இதற்கு முன் இருந்ததை விட 25 விழுக்காடு சரிவைக் கண்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments