பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் தனிநபர் விபரங்களை வழங்கத் தேவையில்லை - பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இயக்குனரகம்

0 3440
பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பத்தில் தனிநபர் விபரங்களை வழங்கத் தேவையில்லை

ஆவின் பால் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் விண்ணப்பங்களில் கல்வி தகுதி உள்ளிட்ட தனிநபர் விபரங்களை வழங்கத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பால் வாங்கும் நுகர்வோர் பலர் பல்வேறு காரணங்களால் தாங்கள் வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடம் செல்கின்றனர் என்றும் அவர்களின் பெயரிலேயே சில பால் விநியோகம் செய்யும் நபர்கள் தொடர்ந்து அட்டைகளை புதுப்பித்து வருகின்றனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பால் அட்டைதாரர்களின் விவரங்களை சமர்ப்பிக்க மேலும் 3 மாத கால அவகாசம் வழங்கப்படுவதாகவும், புதிய விண்ணப்பத்தில் அடிப்படை விவரங்களை பூர்த்தி செய்தால் மட்டும் போதும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments