தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு விசாரணை அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது தேசிய மனித உரிமை ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையைத் தேசிய மனித உரிமை ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை, தமிழக முதன்மைச் செயலர் அறிக்கை ஆகியவற்றைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி சிவஞானம் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வுப் பிரிவு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பதில் மனு தாக்கல் செய்யத் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு மூன்று வாரக் காலக்கெடு விதித்து விசாரணையை செப்டம்பர் 13ஆம் நாளுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
Comments