வோடபோன் ஐடியா நொடித்துப் போனால் அரசுக்குப் பேரிழப்பு - நிபுணர்கள்
வோடபோன் ஐடியா நிறுவனம் நொடித்துப் போனால் அரசுக்குப் பேரிழப்பு ஏற்படும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
வோடபோன் ஐடியா நிறுவனம் 23 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வங்கிக் கடன் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது. சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில் அரசுக்கு 61 ஆயிரம் கோடி ரூபாயும், அலைக்கற்றைக்கான கட்டணமாக 96 ஆயிரத்து 300 கோடி ரூபாயும் செலுத்த வேண்டியுள்ளது.
எனவே நிறுவனம் நொடித்துப் போனால் இந்த நிலுவைத் தொகையை பெறுவது கடினமாகி, அதிகம் பாதிக்கப்படுவது அரசு தான் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். நிறுவனத்தின் கடன்களில் 70 விழுக்காடு பொதுத்துறை வங்கிகளில் பெற்றவை என்பதால் அந்த வகையிலும் இழப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது.
2018ஆம் ஆண்டில் 40 கோடியாக இருந்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, கடந்த மார்ச் மாதத்தில் 26 கோடியே 80 லட்சமாகக் குறைந்துவிட்டது. சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடமிருந்து பெறும் வருவாயும் 107 ரூபாயாகக் குறைந்துள்ளது.
Comments