மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கி முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கடந்த ஆட்சியில் பி.பி.இ. கிட், முகக்கவசம் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யார் என விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 350 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட பி.பி.இ. கிட், தற்போது 120 ரூபாய்க்கும், 80 முதல் 90 ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட N95 முக கவசம் 22 ரூபாய்க்கும் வாங்குவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் கொரோனா நோயாளிகளுக்கு அதிக விலைக்கு உணவு வாங்கியது தடுக்கப்பட்டு, தற்போது உரிய விலை கொடுத்து உணவு வாங்கி வருவதாகவும், அதன் மூலம் 20கோடி ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
Comments