பெர்லினில் சோதனை அடிப்படையில் புதிய திட்டம் ;இரவு பார்ட்டியில் பங்கேற்பவர்களுக்கு 7 நாட்களுக்குப் பின் பி.சி.ஆர் சோதனை
ஜெர்மனி தலைநகர் பெர்லினில் கொரோனாவால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதை தவிர்க்க,சோதனை அடிப்படையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக மக்கள் அதிகம் கூடும் 6 இரவு நேர கிளப்புகளில், கொரோனா நெகடிவ் சான்று பெற்றவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே செல்பவர்கள் மாஸ்க் அணியவோ, தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்கவோ அவசியமில்லை. அவர்கள் கொரோனா தடுப்பூசி போடவில்லையென்றாலும் ஏழு நாட்களுக்குப்பின் மீண்டும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.
அதில் வரும் முடிவுகளை வைத்து, யாருக்கும் தொற்று எற்படாத வகையில், பாதுகாப்பான முறையில் அனைத்து கிளப்புகளையும் திறப்பது குறித்து கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments