13 வயது சிறுமியின் இறப்புக்குக் காரணமாக இருந்த குளிர்பான நிறுவனத்தை நிரந்தரமாக மூடி சீல் வைத்த அதிகாரிகள்

0 5916
13 வயது சிறுமியின் இறப்புக்குக் காரணமாக இருந்த குளிர்பானம் நிறுவனத்திற்கு சீல்

சென்னை பெசண்ட் நகர் சிறுமியின் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாகக் கூறப்படும் அக்சயா ஃபுட் புரோடக்ட்ஸ் குளிர்பான தயாரிப்பு நிறுவனத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தரணி என்ற அந்தச் சிறுமி கடந்த 3ஆம் தேதி தனது வீட்டின் அருகிலுள்ள கடை ஒன்றிலிருந்து 10 ரூபாய் மதிப்புள்ள காலாவதியான Togito Cola என்ற குளிர்பானத்தை வாங்கி அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி உயிரிழந்தார்.

அவருடைய உடலும் நீல நிறத்துக்கு மாறியது. இது தொடர்பாக விசாரணையில் இறங்கிய உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள், கடந்த 5ஆம் தேதி சம்மந்தப்பட்ட குளிர்பானத்தை உற்பத்தி செய்த அக்சயா ஃபுட் புரோடக்ட்ஸ் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டு நிறுவனத்தை தற்காலிகமாக மூடிச் சென்றனர். இன்று மீண்டும் வந்த அதிகாரிகள், நிறுவனத்தை முறையாக மூடி சீல் வைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments