வளிமண்டலச் சுழற்சி, வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பிற மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. அடுத்த 4 நாட்களில் நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
நாளை அரியலூர், பெரம்பலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் கன மழை பெய்யக் கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த இரு நாட்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
Comments