டெல்லி-லண்டன் விமான பயணத்திற்கான எகானமி வகுப்புக்கு அதிக கட்டணம்? விமான நிறுவனங்கள் பதிலளிக்க டிஜிசிஏ உத்தரவு
டெல்லி-லண்டன் எகானமி வகுப்புக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ் சுமார் 4 லட்சம் ரூபாயும், ஏர் இந்தியா, விஸ்டா ஏர் போன்றவை 2.3 லட்சம் வரையும் வசூலிப்பதாக வந்துள்ள புகார் குறித்து விளக்கம் அளிக்க, சம்பந்தப்பட்ட விமான நிறுவங்களுக்கு சிவில் விமானப் போக்குவத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
உள்துறை அமைச்சகத்தின் இன்டர்-ஸ்டேட் கவுன்சிலில் செயலாளராக இருக்கும் சஞ்சீவ் குப்தா, இந்த மாதம் 26 ஆம் தேதிக்கு இந்த அளவுக்கு உயர்ந்த விமானக்கட்டணங்கள் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் டிமாண்ட் அதிகம் உள்ளதால் கட்டணம் உயர்ந்து விட்டதாக விஸ்டா ஏர் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே வாரம் 15 விமான சேவைகளை மட்டுமே நடத்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அனுமதி உள்ளதாகவும், அது அதிகரித்த பின்னர் கட்டணம் தானாக குறைந்து விடும் எனவும் விஸ்டா ஏர் தெரிவித்துள்ளது.
Comments