தமிழகத்தில் 4 மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசு அனுமதி - அமைச்சர் மா.சுப்ரமணியன்
நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருப்பூர் மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதால் 600 மாணவர்களை கூடுதலாக சேர்க்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கேரளாவில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வரும் பயணிகளுக்கு நடைபெறும் கொரோனா பரிசோதனை குறித்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை மாநிலத்தில் இருந்து ரயில் மூலம் தமிழகம் வரும் பயணிகள் கட்டாயம் 72 மணிநேரத்திற்கு முன்பாக எடுக்கப்பட்ட RT-PCR ஸ்கேன் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். அவ்வாறு சான்றிதழ் இல்லாதவர்களுக்கு ரயில் நிலையத்தில் பரிசோதனை செய்யப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
Comments