இமாச்சலப்பிரதேசத்தில் மேலும் ஓரிடத்தில் நிலச்சரிவு..! மலைச்சரிவில் ஏற்பட்ட மண்சரிவைக் கண்டு மக்கள் அலறல்

0 3142

மாச்சலப்பிரதேச மாநிலத்தில் மேலும் ஓரிடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சம்பா மாவட்டத்தில் மலைச் சரிவில் நேற்று பிற்பகலில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பெரும் பாறைகளும், மணலும் சரிந்து விழுந்தன.

நிலச்சரிவினைக் கண்டவர்கள் அச்சத்தில் அலறினர். ஆனால் இந்த நிலச்சரிவில் யாருக்கும் காயமேற்படவோ, உயிரிழக்கவோ இல்லை என சம்பா மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலச்சரிவு காரணமாக பலோத் என்ற இடத்தில் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments