மனித உரிமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் காவல் நிலையங்களில் தான் உள்ளது: தலைமை நீதிபதி கவலை
மனித உரிமைகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் காவல் நிலையங்களில் தான் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.
அண்மையில் வந்த புகார்கள் அடிப்படையில் மிகவும் கௌரவமானவர்கள் கூட, சில காவல்துறையினரின் கீழ்த்தரமான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியவில்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். டெல்லியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, சில காவல் நிலையங்களில் போலீஸ் கஸ்டடியில் கொடூரமான சித்ரவதைகள் தொடர்வதாக கவலை வெளியிட்டார்.
மனித உரிமைகள், மற்றும் தனிநபரின் கண்ணியம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டியவை என்று சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி ரமணா, காவல் நிலைய சித்ரவதை மற்றும் சில போலீசாரின் தவறான செயல்பாடுகள், சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளாகவே தொடர்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Comments