சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொந்த நிலத்தை தானமாக கொடுத்த முன்னாள் பேரூராட்சித் தலைவர்
நாகையில் சுனாமியால் வீடுகளை இழந்த 72 குடும்பங்களுக்கு முன்னாள் பேரூராட்சித் தலைவர் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ளதாக கூறப்படும் தன் சொந்த நிலைத்தை எழுதிக்கொடுத்துள்ளார்.
2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அப்போதைய தமிழக அரசு நிரந்தரக் குடியிருப்புகள் கட்டி தந்தபோது, 72 குடும்பங்கள் கணக்கெடுப்பில் விடுபட்டிருந்தன. அப்போது வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவராக இருந்த தாமஸ் ஆல்வா எடிசன், பூக்கார தெருவில் உள்ள தன் சொந்த நிலத்தில் அவர்களுக்காக தற்காலிக குடிசை வீடுகள் அமைத்து அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தார்.
இந்நிலையில், நிரந்தர வீடு கட்டித் தரக் கோரியும், பட்டா வேண்டியும் அங்கு வசிக்கும் ஏழை மக்கள், தமிழக அரசிடம் மனு கொடுத்துள்ள நிலையில், அவர்கள் குடிசை அமைத்து வாழ்ந்து வரும் 66 சென்ட் நிலத்தையே அவர்களுக்கு தானமாக வழங்கியுள்ளார். அதற்கான பத்திரத்தை மாவட்ட ஆட்சியரிடம் தாமஸ் ஆல்வா எடிசன் வழங்கினார்.
Comments